< Back
மாநில செய்திகள்
தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
16 Jun 2022 10:19 PM IST

ராமேசுவரம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்காக மாநில தரக்கட்டுப்பாட்டு அதிகாரி அசோக், ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ துணை இயக்குனர் டாக்டர் சகாய ஸ்டீபன் ராஜ் மற்றும் மருத்துவ குழுவினர் ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதி, படுக்கை வசதிகள், சுகாதாரம் மற்றும் அனைத்து வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மாநில தரக்கட்டுப்பாட்டு அதிகாரி அசோக் கூறியதாவது:-

ராமேசுவரம் மருத்துவ மனையை தரம் உயர்த்தி நோயாளிகளுக்கு வசதி செய்து கொடுப்பதற்காக ஆய்வு செய்ய வருகை தந்தோம். நேஷனல் லெவல் தேசிய தர சான்று பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேசிய தர சான்று பெற்றால் ஒரு படுக்கைக்கு ரூ.10 ஆயிரம் வீதம் எத்தனை படுக்கைகள் உள்ளதோ அதற்கு தேசிய அளவில் நிதி வழங்கப்பட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்று கூறினார்.ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ துணை இயக்குனர் டாக்டர் சகாய ஸ்டீபன்ராஜ் கூறுகையில், ராமேசுவரம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த அனைத்து நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஆய்வு செய்துள்ளோம். இன்னும் ஒரு மாதத்தில் அகில இந்திய தரக்கட்டுப்பாட்டு அதிகாரி ஆய்வு நடத்த உள்ளார்.பின்னர் இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்