< Back
மாநில செய்திகள்
இந்திய தேர்தல் ஆணையர் அனுப்சந்திர பாண்டே நேரில் ஆய்வு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

இந்திய தேர்தல் ஆணையர் அனுப்சந்திர பாண்டே நேரில் ஆய்வு

தினத்தந்தி
|
16 Jun 2022 9:41 PM IST

ராமநாதபுரத்தில் இருந்து பழுதடைந்த மின்னணு வாக்கு எந்திரங்களை பெங்களூருவுக்கு அனுப்பும் பணியை இந்திய தேர்தல் ஆணையர் அனுப்சந்திர பாண்டே, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆகியோர் ஆய்வு செய்தனர்.


ராமநாதபுரத்தில் இருந்து பழுதடைந்த மின்னணு வாக்கு எந்திரங்களை பெங்களூருவுக்கு அனுப்பும் பணியை இந்திய தேர்தல் ஆணையர் அனுப்சந்திர பாண்டே, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பழுதடைந்த எந்திரங்கள்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிட்டங்கியில் இருப்பில் உள்ள பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களையும் மற்றும் பழுதடைந்த வாக்குஒப்புகை சீட்டுக் கருவி ஆகியவற்றை பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கிட்டங்கியில் 2,528 வாக்குப்பதிவு கருவிகளும், 1,652 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 1,685 வாக்களர் வாக்களித்ததை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டுக் கருவிகள் உள்ளன. இவற்றில் 7 வாக்குப்பதிவு கருவிகளும், 2 கட்டுப்பாட்டுக்கருவிகளும், 34 ஒப்புகை சீட்டு கருவிகளும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதே போல் வேளாண்மை விற்பனை மற்றும் வணிக வளாகம் கிட்டங்கியில் 749 வாக்குப்பதிவு கருவிகளும், 49 கட்டுப்பாட்டுக் கருவிகளும் உள்ளன. அங்கும் பழுதடைந்த கருவிகள் உள்ளன.

தேர்தல் ஆணையர் ஆய்வு

மேற்கண்ட குடோன்களில் உள்ள பழுதடைந்த கருவிகளை பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை பார்வையிட இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே நேரில் வந்திருந்தார். அவருடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவும் வந்தார்.

இருவரும் வாக்கு எந்திரங்கள் அனுப்பும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தபின்னர், வாக்கு எந்திரங்கள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர். அப்போது, ராமநாதபுரம் கலெக்டர் சங்கர்லால் குமாவத், ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. சேக்மன்சூர், தாசில்தார்கள் கார்த்திகேயன், முருகேசன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள், அலுவலர்களும் இருந்தனர்.

மேலும் செய்திகள்