ராமநாதபுரம்
மீன்பிடி விசைப்படகுகள் ஆய்வு
|ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன்பிடி விசைப்படகுகளும் ஆய்வு செய்யப்படும் என்று கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்து உள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன்பிடி விசைப்படகுகளும் ஆய்வு செய்யப்படும் என்று கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்து உள்ளார்.
தடை
கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜீன் 14 வரை 61 நாட்களுக்கு மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பது தடைசெய்யப்பட்டு உள்ளது.
மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளும் ஆய்வு செய்யப்பட்டு படகின் உறுதி தன்மை, எந்திரத்தின் திறன், படகின் நீள அகலம் ஆகியவை பதிவு சான்றுடன் சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் மானிய விலையிலான டீசல், மண் எண்ணெய் மற்றும் இதர மானிய திட்ட நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆய்வு
அதன்படி தற்போது மீன்பிடி விசைப்படகுகளை வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மீன்வளத்துறை அலுவலர்கள் ஜூன் 1,2 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்ய உள்ளனர். மீன வர்கள் மீன்பிடி விசைப்படகினை தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் படி இந்த ஆய்வுக்கு கட்டாயம் உட்படுத்த வேண்டும். ஆய்வின்போது படகு பதிவு குறித்த ஆவணங்கள், தொலைதொடர்பு கருவிகள் ஆகிய வற்றை ஆய்வுக்குழுவிடம் காண்பிக்க வேண்டும். ஆய்வுக்கு உட்படுத்தப்படாத மீன்பிடி விசைப்படகுகளுக்கான மானிய விலையிலான டீசல் நிறுத்தப்படுவதுடன் படகு உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே ராமநாதபுரம் மாவட்ட, விசைப்படகு உரிமை யாளர்கள் அனைவரும் தங்களது பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத படகுகளை தவறாமல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்த தகவலை கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்து உள்ளார்.