< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
ராசிபுரம் அருகே சாலை அகலப்படுத்தும் பணிகளை அதிகாரி ஆய்வு
|26 Oct 2023 12:30 AM IST
ராசிபுரம் அருகே சாலை அகலப்படுத்தும் பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்
ராசிபுரம்:
ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் வெண்ணந்தூர் மின்னக்கல் பகுதியில் செயல்படுத்தப்பட்டு முடிக்கப்பட்ட சாலை அகலப்படுத்தும் பணிகளை நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திருகுணா நேரில் பாரிவையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ராசிபுரம் உட்கோட்டத்திற்குட்பட்ட சாலைகளில் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்து துரிதமாக பணிபுரிவது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஷ் குமார், உதவி பொறியாளர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.