சேலம்
சேலம் அணைமேடுரெயில்வே மேம்பால பணிகளை அதிகாரிகள் ஆய்வு
|சேலம்
சேலம் அணைமேடு ரெயில்வே மேம்பால பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ரெயில்வே பாலம் கட்டும் பணி
சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் முள்ளுவாடி கேட் மற்றும் அணைமேடு பகுதிகளில் ரெயில்வே மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், அணைமேடு பகுதியில் ரூ.92.40 கோடியில் ரெயில்வே பாலம் கட்டும் பணியில் 20 இடங்களில் மேம்பால ஓடுதளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதனை தொடர்ந்து மேம்பாலத்தின் ஓடுதளத்தை அணைமேடு சாலையுடன் இணைக்கும் பணிகள் குறித்தும், அவ்வாறு இணைக்கும்போது போக்குவரத்தை மாற்றம் செய்வது தொடர்பாகவும் சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, இணைப்பு சாலை முடியும் வரையிலும் போக்குவரத்தை எப்படி மாற்றம் செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
மேலும், அணைமேடு ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது சேலம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தேசய்யா மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உடனிருந்தனர்.