< Back
மாநில செய்திகள்
சேலத்தில்குடிநீர் குழாயில் பழுது சரிசெய்யும் பணிமாநகராட்சி மேயர் ஆய்வு
சேலம்
மாநில செய்திகள்

சேலத்தில்குடிநீர் குழாயில் பழுது சரிசெய்யும் பணிமாநகராட்சி மேயர் ஆய்வு

தினத்தந்தி
|
27 Aug 2023 1:27 AM IST

சேலம்

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட எருமாபாளையம் பழைய மற்றும் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, கருங்கல்பட்டி, தாதகாப்பட்டி பழைய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் சிமெண்டு குழாயில் நீர்க்கசிவு ஏற்பட்டது. தற்போது பழைய பஸ்நிலையம் அருகே உள்ள பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள பழுது சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் பணியை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, துணை ஆணையாளர் அசோக்குமார், செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் சுமதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்