< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
சேலத்தில்நெல் அரவை ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு
|27 Aug 2023 1:21 AM IST
சேலம்,
உணவு கடத்தல் தடுப்பு பிரிவின் கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், பெரியசாமி ஆகியோர் நேற்று சேலம், ஆத்தூரில் உள்ள நெல் அரவை ஆலைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த அரவை ஆலைகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் தரமான அரிசி வழங்க வேண்டும், இதில் எந்த விதமான முறைகேடுகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் ஆய்வு ேமற்கொண்ட அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். மேலும் ஆலைகளில் முறையாக ஆவணங்களை பராமரிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.