< Back
மாநில செய்திகள்
பர்கூர் பேரூராட்சியில்ரூ.5.80 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்கலெக்டர் சரயு நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பர்கூர் பேரூராட்சியில்ரூ.5.80 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்கலெக்டர் சரயு நேரில் ஆய்வு

தினத்தந்தி
|
20 Aug 2023 1:15 AM IST

பர்கூர்

பர்கூர் பேரூராட்சியில் ரூ.5.80 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

பர்கூர் பேரூராட்சியில் ரூ.5 கோடியே 80 லட்சத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 38 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பூமாலை நகர் முதல் ஜெகினிகொல்லை இணைப்பு சாலை, வி.ஐ.பி நகர், கணேஷ் நகர், பிருந்தாவன் நகர், கொரலசின்னப்ப செட்டி தெரு ஆகிய பகுதிகளில் தார்சாலை, வசந்த நகர் குறுக்கு சாலை, அனுமன் நகர் குறுக்கு சாலை பகுதிகளில் தார்சாலைகள் அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தார்சாலைகள் அமைக்கும் பணியை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்கன்வாடி மையம்

இந்த திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து மல்லப்பாடி ஊராட்சி நாடார் கொட்டாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறன், கையெழுத்து, கணிதம் மற்றும் ஆங்கில வாசிப்பு திறன் குறித்து மாணவ, மாணவிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

மேலும், அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு தினமும் வழங்கப்படும் உணவு, கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து பர்கூர் போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்து நகரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா செயல்பாடு பணிகள் குறித்தும், வழக்கு விவரங்கள், வழக்குகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், செயல் அலுவலர் செந்தில்குமார், உதவி பொறியாளர் மகேந்திரன், கவுன்சிலர்கள் ஆகாஷ், ஜான்ஜேசுதாஸ் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்