< Back
மாநில செய்திகள்
கரடிஅள்ளி ஊராட்சியில்வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கரடிஅள்ளி ஊராட்சியில்வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு

தினத்தந்தி
|
10 Aug 2023 1:15 AM IST

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் ஒன்றியம் கரடிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சுருளிஅள்ளி ஏரியில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. கரடி அள்ளி, காட்டுகாரன் கொட்டாய் உள்ளிட்ட இடங்களில் வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் பெரிய வேங்கடனூர் முதல் தலைவர் கொட்டாய் வரை தார்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இந்த வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டரும், மாவட்ட திட்ட முகமை இயக்குனருமான வந்தனா கார்க் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா சங்கர், (வட்டார ஊராட்சி) சுப்பிரமணியம், (கிராம ஊராட்சி), மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர் பூங்காவனம் ஆறுமுகம் பணித்தள பொறுப்பாளர் நந்தினி மற்றும் பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்