சேலம்
மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறைதலைமை பொறியாளர் ஆய்வு
|மேட்டூர்
தென்மேற்கு பருவமழை தவறிய நிலையில் மேட்டூர் அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாததால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 58.99 அடியாக குறைந்துள்ளது.
இந்த நிலையில் பொதுப்பணித்துறையின் முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா, மேட்டூர் அணையில் தி்டீரென ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக மேட்டூர் அணையின் உபரிநீர் திட்டமான சரபங்கா திட்டத்தை ஆய்வு செய்தார். அணையின் வலது கரை, இடது கரை பூங்கா, பவள விழா கோபுரம் உள்பட முக்கிய பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சுப்பிரமணி உடன் இருந்தார். முன்னதாக மேட்டூர் அணைக்கு வந்த தலைமை பொறியாளர்களை பொதுப்பணி துறையின் மேட்டூர் நிர்வாக பொறியாளர் சிவக்குமார், உதவி நிர்வாக பொறியாளர் செல்வராஜ், அனை பிரிவு உதவி பொறியாளர் சந்தோஷ் ஆகியோர் வரவேற்றனர்.