< Back
மாநில செய்திகள்
வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு
சேலம்
மாநில செய்திகள்

வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு

தினத்தந்தி
|
7 March 2023 9:56 PM GMT

வெற்றிலை பயிரில் நோய் தாக்குதல் தொடர்பாக வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.

பெத்தநாயக்கன்பாளையம்

ஆத்தூர், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், தும்பல், பாப்பநாயக்கன்பட்டி, இடையப்பட்டி, பெரிய கிருஷ்ணாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக கடும் வெயில், பனி காரணமாக வெற்றிலையை செதில் பூச்சிகள் தாக்கியது. இதனால் ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள வெற்றிலை சேதமடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்தநிலையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சரவணன், ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று நோய் தாக்கிய வெற்றிலை பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

மேலும் செய்திகள்