< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
ஓசூர் பஸ்தி தொடக்கப்பள்ளியில் துணை மேயர் ஆய்வு
|24 Sept 2023 1:15 AM IST
ஓசூர்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஓசூர் மாநகராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட பஸ்தி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், துணை மேயர் ஆனந்தய்யா திடீர் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டார். மேலும், பள்ளியின் உட்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கழிவறைகளையும் அவர் ஆய்வு செய்தார்.