< Back
மாநில செய்திகள்
ஏழை-எளியவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தல்
அரியலூர்
மாநில செய்திகள்

ஏழை-எளியவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தல்

தினத்தந்தி
|
29 Sept 2023 11:51 PM IST

ஏழை-எளியவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக மத்திய அரசின் பெண்கள் விரோத கொள்கைகளையும், மக்கள் விரோத கொள்கைகளையும் கண்டித்து அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நாடு தழுவிய கோரிக்கை விளக்க பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கீதா, மேரி, மாவட்ட செயலாளர் அம்பிகா ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். கூட்டத்தில் சிலிண்டர், பெட்ரோல், டீசல், உணவு பொருட்கள் மீதான விலையை குறைக்க வேண்டும். ஏழை-எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். பெண்கள் மInsist on providing free housing to the poor and needyற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுத்திட வேண்டும். சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி கொடுப்பதுடன், நகர் புறங்களுக்கும் 100 நாள் வேலையை விரிவு படுத்த வேண்டும். மேலும் அக்டோபர் மாதம் 5-ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ள பேரணியில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்