< Back
மாநில செய்திகள்
கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி

தினத்தந்தி
|
25 May 2022 7:06 PM GMT

கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சிக்கு மண்டல துணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். இதில் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான மனோகரன், பொதுவினியோக திட்ட துணைப்பதிவாளர் உதயகுமார், பரமக்குடி சரக துணைப்பதிவாளர் சுல்தான் மைதீன் ஜவஹர், ராமநாதபுரம் சரக துணை பதிவாளர் சுப்பையா மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், இளநிலை முதுநிலை ஆய்வாளர்கள், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்