< Back
மாநில செய்திகள்
சிட்கோ தொழில் கூட்டமைப்பினருக்கு புத்தாக்க பயிற்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சிட்கோ தொழில் கூட்டமைப்பினருக்கு புத்தாக்க பயிற்சி

தினத்தந்தி
|
9 Jun 2023 6:27 PM GMT

சிட்கோ தொழில் கூட்டமைப்பினருக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூரை அடுத்த எளம்பலூரில் சிட்கோ வளாகத்தில் உள்ள பெரம்பலூர் பேப்ரிகேசன் தொழில் கூட்டமைப்பின் (கிளஸ்டர்) அங்கத்தினர்களுக்கு தொழில்முனைவு பயிற்சி வகுப்புகள் தொழில்மைய கூட்ட அரங்கில் 2 நாட்கள் நடந்தது. சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் திருச்சி சிட்கோ நிறுவனம் மற்றும் மாவட்ட தொழில் மையத்துடன் இணைந்து இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இதில் கோவை வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் விஜயகுமார் நவீன ரக கருவிகளின் பயன்பாடு, உற்பத்தி சாதனங்கள், அவற்றை சந்தைப்படுத்துதல் குறித்தும், அரசின் மின்னணு சந்தை நிறுவனமான ஜி.இ.எம். அமைப்பின் சார் பதிவாளர் சபரீசன், உற்பத்தி பொருட்களை இ-சந்தைப்படுத்துதல் குறித்தும் பயிற்சி அளித்தனர். பிசினஸ் தரக்கட்டுப்பாட்டு துறையின் மதுரை மேலாளர் ரமேஷ், உற்பத்திப்பொருட்கள் மற்றும் சாதனங்களை தரக்கட்டுப்பாடு செய்வதன் நோக்கம், தரச்சான்றிதழ் பெறுவதன் அவசியம் குறித்து பயிற்சி அளித்தார்.

மாவட்ட தொழில்மையத்தின் உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர், பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில் திருச்சி சிட்கோ கிளை மேலாளர் பிரான்சிஸ், தொழில் மைய உதவி பொறியாளர் கிருத்திகா, பெரம்பலூர் பேப்ரிகேசன் தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முருகேசன், ராஜா, அமீர்பாட்சா, லட்சுமணன், ராஜேந்திரன், ஜோதிவேல், இளங்கோவன் மற்றும் கிளஸ்டர் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் பயிற்சி திட்ட அலுவலர் சிமியோன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்