< Back
மாநில செய்திகள்
பேரிகை அருகே400 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா30 பேர் காயம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பேரிகை அருகே400 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா30 பேர் காயம்

தினத்தந்தி
|
2 March 2023 7:00 PM GMT

ஓசூர்:

பேரிகை அருகே முதுகுறுக்கியில் 400 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழாவில் 30 பேர் காயம் அடைந்தனர்.

எருதுவிடும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே முதுகுறுக்கி கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடந்தது. விழாவையொட்டி பேரிகை, நெரிகம், சூளகிரி, அத்திமுகம் வேப்பனப்பள்ளி, தர்மபுரி மற்றும் கர்நாடக மாநிலம் மாலூர், மாஸ்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரித்து அழைத்து வரப்பட்டிருந்தன.

இதையடுத்து விழாவை கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் புழுதி கிளப்பியவாறு, மைதானத்தில் சீறிப்பாய்ந்து சென்றன.

போலீசார் பாதுகாப்பு

அப்போது அங்கிருந்த இளைஞர்கள், மாடுபிடி வீரர்கள் காளைகளை விரட்டி சென்று அவற்றின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த அலங்கார தட்டிகள் மற்றும் பரிசு பொருட்களை பறிக்க முயன்றனர்.

இதில் 30 பேர் கீழே விழுந்து காமடைந்தனர். அவர்களில் 2 பேர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விழாவை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க பேரிகை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்