< Back
மாநில செய்திகள்
தொப்பூர் கணவாயில்  மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி படுகாயம்
தர்மபுரி
மாநில செய்திகள்

தொப்பூர் கணவாயில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி படுகாயம்

தினத்தந்தி
|
11 Dec 2022 12:15 AM IST

நல்லம்பள்ளி:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 45). கல் உடைக்கும் தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது தொப்பூர் கணவாய் பகுதியில் வந்தபோது பின்னால் பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரி, வடிவேல் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு வடிவேல் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் வடிவேலுவை மீட்டு சிகிச்சைக்காக தொப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு லாரியை நிறுத்தாமல் சென்ற டிரைவரை தீவட்டிப்பட்டி அருகே போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனா. ஆனால் லாரியில் இருந்து குதித்து டிரைவர் தாப்பி ஓடிவிட்டார். பின்னர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்