பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
|பணிமனைகள், பஸ் நிலையங்களை முற்றுகையிட தொழிற்சங்கத்தினர் திட்டமிட்டுள்ள நிலையில், போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்கள், ஊழியர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. மாவட்ட வாரியாகவும், போக்குவரத்து கோட்டம் வாரியாகவும் விவரங்களை சேகரிக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் பஸ் இயக்கத்தை தடை செய்யும் வகையில் முற்றுகையிடவோ சிறைபிடிக்கவோ முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிற்சங்கங்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறினால் எந்த பாரபட்சமும் இன்றி துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிமனைகள், பஸ் நிலையங்களை முற்றுகையிட தொழிற்சங்கத்தினர் திட்டமிட்டுள்ள நிலையில், போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.