< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் முதற்கட்ட சோதனை ஓட்டம்
|12 Dec 2023 4:08 PM IST
விரைவில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை,
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பிரமாண்ட புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது . இதில் வெளியூர் செல்லும் பேருந்துகளை நிறுத்தவும், பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், காவல்நிலையம், பூங்கா அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இன்று 100 பேருந்துகள் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.இதையடுத்து விரைவில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.