< Back
மாநில செய்திகள்
இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக தகவல் - கோடியக்கரையில் படகுகளில் போலீசார் சோதனை
மாநில செய்திகள்

இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக தகவல் - கோடியக்கரையில் படகுகளில் போலீசார் சோதனை

தினத்தந்தி
|
11 Dec 2022 6:02 AM IST

கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போலீசார் கோடியக்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் சோதனை மேற்கொண்டனர்.

நாகை,

மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் இலங்கைக்கு தமிழகத்தில் இருந்து படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போலீசார் கோடியக்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் சோதனை மேற்கொண்டனர்.

எனினும் இந்த சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்