< Back
மாநில செய்திகள்
ஆதரவற்ற நிலையில் விட்டு சென்ற குழந்தையின் பெற்றோர் பற்றி தகவல் தெரிவிக்கலாம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

ஆதரவற்ற நிலையில் விட்டு சென்ற குழந்தையின் பெற்றோர் பற்றி தகவல் தெரிவிக்கலாம்

தினத்தந்தி
|
29 Dec 2022 1:27 AM IST

புதுக்கோட்டை ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் விட்டு சென்ற குழந்தையின் பெற்றோர் பற்றி தகவல் தெரிவிக்கலாம்

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 13.09.2022 அன்று ஒரு பெண் குழந்தை பிறந்து மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் தாயாருடன் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் கடந்த 17.09.2022 அன்று மேற்குறிப்பிட்ட பெண் குழந்தையை ஆதரவற்ற நிலையில் விட்டு, தாயார் தலைமறைவானார். மருத்துவமனை பணியாளர்கள் தகவல் அளித்ததின் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பனியாளர்கள் மூலம் குழந்தையை மீட்டு புதுக்கோட்டை குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் குழந்தைக்கு நிலா என்று பெயரிடப்பட்டு குழந்தைகள் நலக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் கடந்த 30.09.2022 அன்று சிறப்பு தத்து நிறுவனத்திடம் தற்காலிக பராமரிப்பிற்காக குழந்தை ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இப்பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய விவரம் தெரிந்தால் 21 நாட்களுக்குள் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்திற்கு (தலைவர்- 6369032204) அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு (6369029895) தகவல் தெரிவிக்கலாம். மேலும் அவ்வாறு குழந்தைக்கு யாரும் உரிமை கோராத பட்சத்தில் இக்குழந்தையை சட்டப்படியாக தத்துக்கொடுப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்படும். இக்குழந்தை பற்றிய விவரம் தெரிந்தால் பொதுமக்கள், புதுக்கோட்டை கல்யாணபுரத்தில் முன்னாள் படை வீரர்கள் மைய வளாகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் அலுவலரிடம் தகவல் தெரிவிக்கலாம். மேலும் 04322-221266 என்ற தொலைபேசியில் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்