< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
சாயல்குடி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் பேரூராட்சி செயலாளர் தகவல்
|23 March 2023 12:15 AM IST
சாயல்குடி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என பேரூராட்சி செயலாளர் தகவல் தெரிவித்தார்
சாயல்குடி,
சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பில் கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அக்கடைகள் தற்போது பஸ்கள் வந்து செல்வதற்கும் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. பேரூராட்சி சார்பில் கடைகள் கொடுத்த அளவைவிட கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் கடைக்காரர்கள் தங்களது ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்ததால் பேரூராட்சி சார்பில் அனைத்து கடைக்காரர்களும் தங்களாக ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இன்று(வியாழக்கிழமை) பேரூராட்சி நிர்வாகம் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருடன் இணைந்து சாயல்குடி பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என சாயல்குடி பேரூராட்சி செயலாளர் சேகர் தெரிவித்தார்.