< Back
மாநில செய்திகள்
அனுமதியற்ற பள்ளி கட்டிடங்களுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் நகர அமைப்பு துணை இயக்குனர் தகவல்
சிவகங்கை
மாநில செய்திகள்

அனுமதியற்ற பள்ளி கட்டிடங்களுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் நகர அமைப்பு துணை இயக்குனர் தகவல்

தினத்தந்தி
|
16 March 2023 12:15 AM IST

அனுமதியற்ற பள்ளி கட்டிடங்களுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என நகர அமைப்பு துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்

சிவகங்கை,

சிவகங்கை மண்டல நகரமைப்பு துணை இயக்குனர் மஞ்சு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது.:-

நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இத்துறையால் அனுமதி வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 14.6.2018 முதல் 13.9.2018 வரை 3 மாத காலத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மேலும் நீதிமன்ற உத்தரவின்படி 22.3.2021 முதல் 4.4.2021 வரை இருவார காலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மீண்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க 24.6.2022 முதல் 31.12.2022 வரை 6 மாத காலம் நீட்டிப்பு வழங்கப்பட்டது.

தற்போது விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றொரு வாய்ப்பாக ஜூன் 30-ம்தேதி வரை அனுமதி பெற காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பவர்கள் உரிய விவரங்களை சமர்ப்பித்து அனுமதி பெற சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tn.gov.in/tcp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்