< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
ரெப்கோ வங்கியில் மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி காரைக்குடி கிளை உதவி பொதுமேலாளர் தகவல்
|7 March 2023 12:15 AM IST
ரெப்கோ வங்கியில் மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது என காரைக்குடி கிளை உதவி பொதுமேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்
காரைக்குடி,
காரைக்குடி கிளை ரெப்கோ வங்கியின் உதவி பொதுமேலாளர் பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ரெப்கோ வங்கியில் முதலீடுகளுக்கு மூத்த குடிமக்களுக்கு 15 மாதங்களுக்கு 8.55 சதவீதமும், மற்றவர்களுக்கு 8.05 சதவீதமும் வட்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நகை கடன்களுக்கு கிராமிற்கு ரூ.4200 வரை மதிப்பீட்டாளர் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. மேலும் அடமான கடன்களுக்கு ரூ.5 கோடி வரை குறைந்த வட்டியில் விரைவாகவும் கடன் வழங்கப்படுகிறது. எனவே வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.