தர்மபுரி
லியோ" படத்தை 5 காட்சிகள் திரையிட அனுமதி கலெக்டர் சாந்தி தகவல்
|தர்மபுரி மாவட்டத்தில் `லியோ" படத்தை 5 காட்சிகள் திரையிட அனுமதி கலெக்டர் சாந்தி அனுமதி அளித்துள்ளார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் `லியோ" படத்தை 5 காட்சிகள் திரையிட அனுமதி கலெக்டர் சாந்தி அனுமதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிறப்பு காட்சிக்கு அனுமதி
தர்மபுரி மாவட்டத்தில் லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரை 6 நாட்களுக்கு காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை என அதிகபட்சம் நாள் ஒன்றுக்கு 5 காட்சிகள் மட்டும் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நேரம் தவிர்த்து பிற நேரங்களில் கூடுதல் காட்சி இயக்க அனுமதி இல்லை.
அனுமதிக்கப்பட்ட கூடுதல் காட்சி திரையிடப்படும் திரையரங்குகளில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். திரையரங்குகளில் திரைப்படம் காண்போரின் வாகனங்கள் உள்ளே வருவது, வெளியேறுதல் வாகனத்தை நிறுத்துதல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காவல்துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்ற பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.
கடும் நடவடிக்கை
திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும். பார்வையாளர்கள் சிரமம் இன்றி திரையரங்கிற்கு உள்ளே வரவும், சிரமம் இல்லாமல் வெளியேறவும் இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தாலோ, அனுமதி பெறாமல் கூடுதல் காட்சிகள் திரையிட்டாலோ சம்பந்தப்பட்ட திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.