< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
காய்ச்சல் தடுப்பு முகாம்
|20 Oct 2023 12:15 AM IST
ஜவுளிக்குப்பம் கிராமத்தில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது.
சங்கராபுரம் அருகே உள்ள ஜவுளிக்குப்பம் கிராமத்தில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. டாக்டர் சுகன்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கிராம மக்களுக்கு காய்ச்சல், இருமல், உடல் வலி மற்றும் உடல் உபாதை சம்பந்தமாக பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அன்புஅன்பரசு, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், அறிவழகன், செவிலியர் சங்கீதா, சிவசக்தி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.