< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,200 கன அடியாக நீடிப்பு
மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,200 கன அடியாக நீடிப்பு

தினத்தந்தி
|
13 Nov 2022 10:44 AM IST

தொடர்ந்து 32-வது நாளாக அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.

மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 15,200 கன அடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இதில் காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதமும், கால்வாயில் 200 கன அடி வீதமும் என மொத்தம் 15,750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றன.

தொடர்ந்து 32-வது நாளாக அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. அணை முழுவதும் நிரம்பி உள்ளதால் கடல்போல காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்