< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,200 கன அடியாக சரிவு
மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,200 கன அடியாக சரிவு

தினத்தந்தி
|
12 Nov 2022 10:14 AM IST

மேட்டூர் அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 15,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் வினாடிக்கு 14,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணைக்கு கடந்த 3 நாட்களாக வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியிலும், 750 கன அடி தண்ணீர் கால்வாயிலும் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து சரிந்து, மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 200 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இதை அடுத்து அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு 15,000 கன அடியாக குறைக்கப்பட்டது.

கால்வாயில் 750 கன அடியில் இருந்து 200 கன அடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 15,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது.

மேலும் செய்திகள்