< Back
மாநில செய்திகள்
தொடர்மழை எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 600 கன அடியாக அதிகரிப்பு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

தொடர்மழை எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 600 கன அடியாக அதிகரிப்பு

தினத்தந்தி
|
2 Nov 2022 8:10 AM GMT

தொடர் மழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 600 கன அடியாக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20.33 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2 ஆயிரத்து 685 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 600 கன அடியாகவும் உள்ளது.

நேற்று முன்தினம் முதல் கன மழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து நேற்று காலை வரை 150 கன அடியாக இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ள ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம், நேமம் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளும் நீர் நிறைந்து காணப்படுவதால் அங்கிருந்தும் உபரி நீர் மற்றும் மழை நீர் அதிக அளவில் வருவதால் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் மழை தொடர்ந்து பெய்யும் என்பதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் 23 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்தி கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்