< Back
மாநில செய்திகள்
பள்ளி கழிவறையில் இறந்து கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை
திருச்சி
மாநில செய்திகள்

பள்ளி கழிவறையில் இறந்து கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை

தினத்தந்தி
|
8 Dec 2022 2:27 AM IST

திருவெறும்பூர் அருகே பள்ளி கழிவறையில் பச்சிளம் ஆண் குழந்தை இறந்து கிடந்தது.

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கழிவறையில் பிறந்து சில மணி நேரங்களேயான நிலையில் இறந்த நிலையில் ஆண் குழந்தை கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் சந்திர தேவநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இந்த குழந்தை தவறான உறவில் பிறந்ததா? அல்லது வேறு யாரேனும் இந்த குழந்தையை இங்கு வீசி சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்