< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்

தினத்தந்தி
|
14 Jun 2022 1:52 AM IST

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்டவை பள்ளி திறந்த முதல் நாளிலேயே வழங்கப்பட்டது. ஒரு மாதத்துக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தாமல், அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையிலும், நம்பிக்கை ஊட்டும் வகையிலும் கதை, பாடல், விளையாட்டு, வண்ணம் தீட்டுதல், நினைவாற்றலை வளர்ப்பதற்கான விளையாட்டு உத்திகள் போன்ற புத்துணர்வு பயிற்சியை ஆசிரியர்கள் அளித்தனர். ஒரு வாரத்திற்கு மாணவ-மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சியும், அதற்கு பிறகு வழக்கமான பாடங்கள் அட்டவணைப்படியும் நடத்தப்பட உள்ளது. பிளஸ்-2 வகுப்புக்கு வருகிற 20-ந்தேதியும், பிளஸ்-1 வகுப்புக்கு வருகிற 27-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்