< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டியில் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடு
|26 Jun 2022 3:05 PM IST
கும்மிடிப்பூண்டியில் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடு வழங்கும் விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கால்நடைதுறை சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற பெண்கள் என 100 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் தலைமை தாங்கினார். பொன்னேரி கோட்ட உதவி இயக்குனர் கோபி கிருஷ்ணா, ஒன்றிக்குழுத்தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கோவிந்தராஜன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளையும் அதற்கான பராமரிப்பு தொகையையும் வழங்கினார்.