< Back
மாநில செய்திகள்
இரவு நேரங்களில் கொட்டப்படும் தொழிற்சாலை கழிவுகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

இரவு நேரங்களில் கொட்டப்படும் தொழிற்சாலை கழிவுகள்

தினத்தந்தி
|
19 Jun 2023 5:04 PM GMT

இரவு நேரங்களில் கொட்டப்படும் தொழிற்சாலை கழிவுகளை அகற்ற தாசில்தார் நடவடிக்கை எடுத்தார்.

நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமத்தில் வேலூர் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள கலைமகள் சபா இடத்தில் இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தொழிற்சாலை கழிவுகளை வாகனங்களில் எடுத்து வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் துர் நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாரிடம் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் அந்திரம் மூலம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டி வாகனங்கள் உள்ளே செல்லாதவாறு தடுப்பு ஏற்படுத்தினர். பின்னர் பள்ளம் தோண்டி தொழிற்சாலை கழிவுகளை அதில் போட்டு மூடினர். ஊராட்சித் தலைவர், கிராம நிர்வாக அலுவலர், வார்டு உறுப்பினர் மற்றும் கிராம உதவியாளர் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்