கள்ளக்குறிச்சி
சின்னசேலம் பகுதியில் தொழிற்சாலைகள் வேலை நிறுத்தம்
|மின் கட்டண உயர்வை கண்டித்து சின்னசேலம் பகுதியில் தொழிற்சாலைகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.
சின்னசேலம்
மின் கட்டண உயா்வை திரும்பபெற வேண்டும், மின் கட்டண உயர்வை ரத்து செய்து பழைய கட்டண முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவ தும் சிறு, குறு தொழிற்சாலைகள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. அதன்படி சின்னசேலம் பகுதியில் உள்ள அரிசி ஆலைகள், ஊதுபத்தி தொழிற்சாலைகள் உள்பட 100 தொழிற்சாலைகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடியபடி களை இழந்து காணப்பட்டன. இது குறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, அத்தியாவசிய தொழில்களில் அரிசி ஆலை தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது மின் கட்டண உயர்வால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தமிழ்நாடு அனைத்து தொழில் கூட்டமைப்பு பலமுறை அரசிடமும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும் எடுத்துக்கூறியும் கோரிக்கைளை கண்டுகொள்ளாத நிலையில் இருப்பதால் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழகத்தில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறிய நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி, வேலை நிறுத்தம் செய்துள்ளோம் என்றனர்.