< Back
மாநில செய்திகள்
தொழில் வளர்ச்சி 10.3 சதவீதமாக உயர்ந்தது
விருதுநகர்
மாநில செய்திகள்

தொழில் வளர்ச்சி 10.3 சதவீதமாக உயர்ந்தது

தினத்தந்தி
|
14 Oct 2023 1:17 AM IST

சில்லரை பணவீக்கம் குறைந்ததால் தொழில் வளர்ச்சி 10.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என பொருளியல் நிபுணர் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி அதிகபட்ச சில்லரை பணவீக்கம் 6 சதவீதமாக இருக்க வேண்டும் என நிர்ணயித்துள்ள நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் சில்லரை பணவீக்கம் 6.83 சதவீதமாக இருந்தது. இதனைதொடர்ந்து ரிசர்வ் வங்கி சில்லரை பண வீக்கத்தை கட்டுப்படுத்த வங்கி வட்டி வீதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த பொருளாதார ஆலோசனை குழு கூட்டத்தில் வங்கி வட்டி சதவீதத்தை உயர்த்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாத முடிவில் சில்லரை பணவீக்கம் 5.02 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு காரணம் உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை குறைந்தது என கூறப்படுகிறது.கடந்த ஆகஸ்டு மாதத்தில் உணவுப்பொருட்களின் பணவீக்கம் 9.94 சதவீதமாக இருந்த நிலையில் செப்டம்பர் மாதம் இது 4.65 சதவீதமாகவும், ஜவுளி, தோல் உள்ளிட்ட பொருட்கள் ஆகஸ்டு மாதம் 5.15 சதவீதமாக இருந்த நிலையில் செப்டம்பர் மாதம் 4.61 சதவீதமாகவும், எரிபொருள் பண வீக்கம் ஆகஸ்டு மாதம் 4.1 சதவீதமாக இருந்த நிலையில் செப்டம்பர் மாதம் 0.11 சதவீதமாகவும் இதர பொருட்கள் ஆகஸ்டு மாதம் 4.10 சதவீதமாக இருந்த நிலையில் செப்டம்பர் மாதம் 3.06 சதவீதமாக குறைந்துள்ளது.

இதனை தொடர்ந்து ஜூலை மாதம் 6.83 சதவீதமாக இருந்த சில்லரை பண வீக்கம் செப்டம்பர் மாதம் 5.02 சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோன்று தொழில் வளர்ச்சி கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவு கடந்த ஆகஸ்டு மாதம் 10.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 4.6 சதவீதமாக இருந்த தொழில் வளர்ச்சி மே மாதம் 5.7 சதவீதமாகவும், ஜூன் மாதம் 3.8 சதவீதமாகவும், ஜூலை மாதம் 6.6 சதவீதமாகவும், ஆகஸ்டு மாதம் 10.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதற்கு காரணம் அனைத்து தொழில் உற்பத்தியும் அதிகரித்து உள்ளது தான்.இதன் காரணமாக அடுத்த ஆகஸ்டு மாதம் வரை வங்கி வட்டி விகிதத்தை மாற்ற வாய்ப்பு இருக்காது என்றே கருதப்படுகிறது.மேற்கண்ட தகவலை பொருளியல் நிபுணர் கூறினார்.


மேலும் செய்திகள்