< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழில்துறை வளர்ச்சி ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழில்துறை வளர்ச்சி ஆலோசனை கூட்டம்

தினத்தந்தி
|
19 Aug 2023 1:39 PM IST

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழில்துறை வளர்ச்சி ஆலோசனை கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனம் சார்பாக மாவட்டத்தில் உள்ள தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது.

தொழில்துறைக்கான திறன், போட்டி திறன் மற்றும் வணிக வாய்ப்புகளை மேம்படுத்துதல் மூலம் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தை வடிவமைப்பதிலும் தொழில்துறையின் ஈடுபாட்டை மாற்றுவதில் முனைப்புடனும் செயல்பட்டு வரும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனம் சார்பாக மாவட்டத்தில் உள்ள தொழில் துறைகளின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையிலும் தொழில்துறையில் தொடர்ச்சியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஏதுவாக தொழில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வெங்கடேசன், சி.ஐ.ஐ. மற்றும் சென்னை மண்டல நிர்வாக இயக்குநர் ஏ.ஆர்.உன்னிகிருஷ்ணன், துணைத் தலைவர் மிலன் வாஹி, தொழில் முனைவோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்