கோவில் திருவிழாவில் தனிநபர்களுக்கு முதல் மரியாதை கூடாது: அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
|கோவில் திருவிழாவில் தனிநபர்களுக்கு முதல் மரியாதை அளிக்கக்கூடாது எனவும், அனைத்து சமூகத்தினரும் பங்கேற்பதை அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
எங்கள் கிராமத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாந்திவீரன்சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் 8 நாட்கள் திருவிழா நடைபெறும்.
கடந்த 2020-ம் ஆண்டு கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக்கூடாது என இந்து அறநிலையத்துறை அறிவித்தது.
இதை எதிர்த்து எங்கள் கிராமத்தை சேர்ந்த சிலர் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. தற்போது நடக்க உள்ள எங்கள் கிராம கோவில் திருவிழாவில் அதே நபர்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆனி மாத திருவிழாவில் தனிநபர்களுக்கு முதல் மரியாதை அளிக்கக்கூடாது என்றும், அனைத்து சமூகத்தினரும் இந்த திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
உறுதி செய்ய வேண்டும்
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நிர்வாகி நீதிபதி சுப்பிரமணியன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், கோவில் திருவிழாவில் தனிநபர்களுக்கு முதல் மரியாதை அளிக்கக்கூடாது. அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் கோவில் திருவிழாவில் பங்கேற்பதை அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.