< Back
மாநில செய்திகள்
பிளஸ்-2 தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள்
அரியலூர்
மாநில செய்திகள்

பிளஸ்-2 தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள்

தினத்தந்தி
|
14 March 2023 1:22 AM IST

பிளஸ்-2 தேர்வை தனித்தேர்வர்கள் எழுதினர்.

அரியலூர் மாவட்டத்தில் தனித்தேர்வர்களில் பிளஸ்-2 தமிழ் தேர்வெழுத 40 ஆண்களும், 52 பெண்களும் என மொத்தம் 92 பேர் தகுதி பெற்றிருந்தனர். அவர்கள் தேர்வெழுத 2 மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. தனித்தேர்வர்களில் ஆண்களில் 6 பேரும், பெண்களில் 4 பேரும் என மொத்தம் 10 பேர் தேர்வுக்கு வரவில்லை. மற்றவர்கள் தேர்வு எழுதினர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் தனித்தேர்வர்களில் தமிழ் தேர்வெழுத 12 ஆண்களும், 42 பெண்களும் என மொத்தம் 54 பேர் தகுதி பெற்றிருந்தனர். அவர்கள் தேர்வெழுத 2 மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. தனித்தேர்வர்களில் பெண்களில் 3 பேர் மட்டும் தேர்வுக்கு வரவில்லை.

மேலும் செய்திகள்