< Back
மாநில செய்திகள்
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம்
மாநில செய்திகள்

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம்

தினத்தந்தி
|
23 Dec 2023 12:42 AM IST

சேவை மையங்களில் இணையம் வழியே விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 2024 மார்ச் மாதத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த தேர்வுகளின் முடிவுகள் மே மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் வரும் 27-ந்தேதி முதல் ஜனவரி 10-ந்தேதி வரை சேவை மையங்களில் இணையம் வழியே விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும் தக்கல் முறையில், ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சிறப்புக் கட்டணம் செலுத்தி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்