< Back
மாநில செய்திகள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெருமுனை பிரசாரம்
தென்காசி
மாநில செய்திகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெருமுனை பிரசாரம்

தினத்தந்தி
|
23 Oct 2023 12:15 AM IST

வாசுதேவநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெருமுனை பிரசாரம் நடந்தது.

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-வது ஆண்டு பவள விழா தெருமுனை பிரசார கூட்டம் பழைய தீயணைப்பு நிலையம் அருகில் நடைபெற்றது. நகர தலைவர் மிலிட்டரி சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். ஜமாத் கமிட்டி தலைவர் சாகுல் ஹமீது, வாசுதேவநல்லூர் பேரூராட்சி கவுன்சிலர் நாகூர் சாகுல்ஹமீது, முகமது அலி, மடத்துப்பட்டி பஞ்சாயத்து தலைவர் செய்யது, திவான்சா, சேட், திவான் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசுதேவநல்லூர் நகர் பள்ளிவாசல் இமாம் முகம்மது இஸ்மாயில், ஆலிம் கிராஅத் ஓதினார். நகர செயலாளர் செய்யது வரவேற்றார்.

செய்யது மசூது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் பேரவை தேசிய துணைத்தலைவர் புளியங்குடி அல் அமீன், வர்த்தக அணி மாநில தலைவர் செய்யது சுலைமான் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ், செயலாளர் செய்யது பட்டாணி, பொருளாளர் செய்யது மசூது, மாவட்ட முதன்மை துணை தலைவர் அப்துல் வகாப் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நகர பொருளாளர் ரஹ்மத்துல்லா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்