< Back
மாநில செய்திகள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்

தினத்தந்தி
|
9 Aug 2023 2:49 AM IST

பாளையங்கோட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

பாளையங்கோட்டை:

நெல்லை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் நடந்தது. மாவட்ட தலைவர் மீரான் மைதீன் தலைமை தாங்கினார். இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக எல்.கே.எஸ்.மீரான் மைதீன், செயலாளராக பாட்டப்பத்து முகம்மது அலி, பொருளாளராக ஆதம் இல்யாஸ் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் மாநில பொது செயலாளர் அபுபக்கர் பேசுகையில், 'இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா நிறைவு மாநாடு டெல்லியில் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்றனர். மேலும், தேசிய தலைமை நிலையமான காயிதே மில்லத் சென்டரும் திறக்கப்படுகிறது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளோம். முஸ்லிம் சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். வரும் செப்டம்பர் மாதத்துக்குள் இந்த கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்" என்றார்.

கூட்டத்தில் மாநில துணை தலைவர் கோதர் மைதீன், நெல்லை மஜீத், மாநில துணை செயலாளர் இப்ராகிம் மக்கி, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஜப்பார், தென் மண்டல இளைஞர் அணி அமைப்பாளர் முகம்மது கடாபி, மாவட்ட துணை தலைவர் கானகத்து மீரான், நிர்வாகிகள் கான்சா, அப்துல் கலாம், ஜாகீர், கவுன்சிலர் முகைதீன் அப்துல் காதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்