< Back
மாநில செய்திகள்
அக்னிபத் திட்டத்தை எதிர்த்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

'அக்னிபத்' திட்டத்தை எதிர்த்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் கைது

தினத்தந்தி
|
23 Jun 2022 2:04 PM IST

‘அக்னிபத்' திட்டத்தை எதிர்த்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசின் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் 'அக்னிபத்' திட்டத்தை எதிர்த்தும், அதனை கைவிட வலியுறுத்தியும், வட மாநிலங்களில் போராட்டங்கள் வலுத்து வருகிறது. தமிழகத்திலில் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். இதனையடுத்து அங்கு முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில், போராட்டத்திற்கு வந்த இந்திய மாணவர் சங்கத்தினர், போலீசாரின் தடுப்பு வேலியை மீறி ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஆக்ரோஷமான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 7 மாணவிகள் உள்பட மொத்தம் 25 பேரை கவரைப்பேட்டை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்