< Back
மாநில செய்திகள்
இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேலம்
மாநில செய்திகள்

இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
20 July 2022 6:53 PM GMT

இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய குடியரசு கட்சி சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சேலம் மத்திய மாவட்ட மாநகர தலைவர் செபாஸ்டின் தலைமை தாங்கினார். செயலாளர் வடிவேல்முருகன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். இதில் பெரியார் பல்கலைக்கழக பருவத்தேர்வில் சாதி குறித்து கேள்வி தயாரித்ததை கண்டித்தல். மேலும் பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் கேள்வி தயாரித்த பேராசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்