< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|1 Sept 2023 3:20 AM IST
நெல்லையில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய குடியரசு கட்சியினர் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை மாவட்ட தலைவர் மகாலிங்கம் இசக்கியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் சிம்சன் (கன்னியாகுமரி), சிவலிங்கம் (தூத்துக்குடி), ஆறுமுகம் (திண்டுக்கல்), மாரிமுத்து (விருதுநகர்), கிருஷ்ணமூர்த்தி (திருச்சி), ரவிச்சந்திரன் (சிவகங்கை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத்தலைவர் செ.கு.தமிழரசன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னத்துரை மற்றும் அவருடைய சகோதரியை வீடு புகுந்து தாக்கிய சம்பவத்தை கண்டித்தும், அந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில பொதுச் செயலாளர்கள் மங்காபிள்ளை, அன்புவேந்தன், பொருளாளர் கவுரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.