< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
புயல் உருவாவதையொட்டி, மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கை
|20 Oct 2023 8:58 PM IST
புயல் உருவாவதையொட்டி, மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்து வருகிறது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை நேற்றுடன் விலகியது. தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் உருவாகும் புயல் மேற்கு இந்திய கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புயல் உருவாவதை முன்னிட்டு, மீன்பிடி படகுகளை துறைமுகத்திற்கு திருப்புமாறு தமிழக மீனவர்களுக்கு இந்திய கடலோர காவற்படை எச்சரிக்கை விடுத்து வருகிறது.