< Back
மாநில செய்திகள்
இந்தியன் வங்கி கிளை திறப்பு
தென்காசி
மாநில செய்திகள்

இந்தியன் வங்கி கிளை திறப்பு

தினத்தந்தி
|
27 Aug 2023 1:46 AM IST

கடையத்தில் இந்தியன் வங்கி கிளை திறப்பு விழா நடந்தது.

கடையம்:

தெற்கு கடையத்தில் இயங்கி வந்த இந்தியன் வங்கி கிளையானது, கடையம் மெயின் ரோடு குமரேச சீனிவாச நகரில் யூனியன் அலுவலகம் அருகில் புதிய கட்டிடத்துக்கு இடமாற்றப்பட்டு திறப்பு விழா நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன் தலைமை தாங்கி, வங்கி கிளையை திறந்து வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன், வங்கி கோவை கள பொதுமேலாளர் சுதாராணி, நெல்லை மண்டல மேலாளர் ஜெயபாண்டியன், மண்டல துணை மேலாளர் செந்தில்குமார், கிளை மேலாளர் நிஷா கேத்தரின், பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் உள்பட பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்