சென்னை
ஆவடி விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுதாரி ஆய்வு
|ஆவடி விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுதாரி ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை ஆவடியில் உள்ள விமானப்படை நிலையத்துக்கு, இந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுதாரி மற்றும் அவருடைய மனைவியும், விமானப்படை குடும்ப நலச்சங்கத்தின் (மத்திய) தலைவியான நீதா சவுதாரி ஆகியோர் நேற்று சென்றனர். அவர்களை, ஆவடி விமானப்படை நிலையத்தின் கமாண்டிங் அதிகாரி எஸ்.சிவகுமார் மற்றும் அவருடைய மனைவியும், விமானப்படை குடும்ப நலச்சங்கத்தின் தலைவியான (உள்ளூர்) ஷீபா சிவகுமார் ஆகியோர் வரவேற்றனர்.
ஆவடி விமானப்படை நிலையத்தில் உள்ள தயார்நிலை குறித்து ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுதாரி ஆய்வு மேற்கொண்டார். மேலும் விமானப்படை நிலையத்தில் உள்ள பல்வேறு இடங்களையும் அவர் பார்வையிட்டார். போர் தளவாட பொருட்களை பராமரிப்பது தொடர்பான செயல்பாடுகளின் அவசியம் குறித்து அவர் வீரர்களிடம் எடுத்து கூறினார். ஆவடி விமானப்படை நிலையத்தில் வீரர்கள் செய்திருந்த சிறப்பான பணிக்கு, வி.ஆர்.சவுதாரி பாராட்டு தெரிவித்தார்.