< Back
மாநில செய்திகள்
தாம்பரத்தில் விமானப்படை தின விழா கொண்டாட்டம்
மாநில செய்திகள்

தாம்பரத்தில் விமானப்படை தின விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
9 Oct 2022 4:45 AM IST

இந்திய விமானப்படையின் 90-வது ஆண்டு விழா, சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் நடந்தது.

விழாவுக்கு விமானப்படை தளபதி ஏர் கமாண்டர் விபுல் சிங் தலைமை தாங்கினார்.விழாவில் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழி சாகச காட்சிகள் நடந்தது. குரூப் கேப்டன்கள் பி.பி.மிஸ்ரா, என்.நாகர்கோடி மற்றும் எஸ்.சாய் கிரண் ஆகியோர் முறையே 'பிலடஸ்', 'கிரண்' மற்றும் 'சேதக் வகை ஹெலிகாப்டர்' அமைப்புகளுக்கு தலைமை தாங்கினர். ஜெட் விமானத்தை விங் கமாண்டர் ஆதித்யா சுஹாக் மற்றும் பிளைட் லெப்டினன்ட் அங்கூர் மேத்தா ஆகியோர் இயக்கினர். மெக்கானிக்கல் பயிற்சி நிறுவனத்தின் பயிற்சியாளர்களால் தரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

வான்வீரர் பயிற்சி குழு தங்களது திறமையான மற்றும் துல்லியமான செயல்திறனால் பார்வையாளர்களை கவர்ந்தனர். தற்காப்பு கலை காட்சி, உடல் பயிற்சி, இளம் பயிற்சியாளர்களால் சுழற்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. 10 வகையான விமானங்களின் நிலையான காட்சியும் காட்சிப்படுத்தப்பட்டது. தாம்பரத்தில் உள்ள அழகான வண்டலூர் மலைகளின் பின்னணியில் நடந்த விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளை கண்டு பார்வையாளர்கள் மிகவும் பரவசம் அடைந்தனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்