< Back
மாநில செய்திகள்
தொழில்நுட்பத்துறையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியா முதன்மையாக இருக்கும் - மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர்
மாநில செய்திகள்

'தொழில்நுட்பத்துறையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியா முதன்மையாக இருக்கும்' - மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர்

தினத்தந்தி
|
7 July 2023 6:01 PM IST

அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொழில்நுட்பத்துறையில் இந்தியா தான் மற்ற நாடுகளுக்கு தலைமையாக இருக்கும் என்று ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் 113-வது ஆண்டு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் வரலாற்று சிறப்பு மிக்கது என்றும், அவரது பயணம் இந்தியாவில் தொழில்நுட்பத்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறினார். பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பு ஏற்றது முதல் 9 ஆண்டுகளில் தொழில்நுட்பத்துறையில் இந்தியா பல்வேறு வளர்ச்சிகளை அடைந்துள்ளதாகவும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியா தான் மற்ற நாடுகளுக்கு தலைமையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

ஒரு காலத்தில் மின்னணு பொருட்களை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டிய சூழலில் இந்தியா இருந்ததாக குறிப்பிட்ட அவர், கடந்த ஆண்டில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு மின்னணு பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்