< Back
மாநில செய்திகள்
இந்திய அரசியலமைப்பு மூலம் தான் இந்தியா ஆளப்பட வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
மாநில செய்திகள்

"இந்திய அரசியலமைப்பு மூலம் தான் இந்தியா ஆளப்பட வேண்டும்" - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

தினத்தந்தி
|
6 Nov 2022 10:27 PM IST

அரசியலமைப்பு மூலம் தான் இந்தியா ஆளப்பட வேண்டும் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் தேசிய மாதிரி விசாரணை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.எம்.ரவி சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய அரசியலமைப்பு மூலம் தான் இந்தியா ஆளப்பட வேண்டும் என்று தெரிவித்தார். அதோடு வழக்குகளில் தீர்ப்புகள் தாமதமாக்கப்படுவதை தவிர்க்க தொழில்நுட்ப ரீதியாக புதிய அணுகுமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக அரசியலமைப்பை விட பாரதம் மிகப் பழமையானது என கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது அதே அரசியலமைப்பு மூலம் தான் இந்தியா ஆளப்பட வேண்டும் என அவர் கூறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் செய்திகள்